காய்கறி வியாபாரிக்கு ரூ.29 லட்சம் வரி - UPI மூலம் வந்த வினை!
காய்கறி வியாபாரி ஒருவருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காய்கறி வியாபாரம்
கர்நாடகா, ஹாவேரி எனும் பகுதியில் சங்கர்கௌடா ஹடிமணி என்பவர் சிறிய காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அதில், ’கடந்த நான்கு ஆண்டுகளில் 1.63 கோடிக்கு பரிவர்த்தனை செய்துள்ளதாகவும், அதற்காக ரூ. 29 லட்சம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூறுகையில்,
ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி
“நான் புதிய காய்கறிகளை விற்பனை செய்கிறேன். இப்போதெல்லாம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்து வருவதில்லை. யுபிஐ முறையைத்தான் பயன்படுத்துகின்றனர். நான் ஒவ்வோர் ஆண்டும் உடனடியாக IT வருமான வரி தாக்கல் செய்கிறேன்.
அதற்கான பதிவுகள் என்னிடம் உள்ளன. ஆயினும், GST அதிகாரிகள் ரூ.29 லட்சம் வரி கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை நான் எப்படி செலுத்த முடியும்" என வேதனை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சங்கர்கௌடா உள்ளிட்ட பல சிறு வணிகர்கள் யுபிஐ மூலம் பணம் வாங்குவதை நிறுத்தி விட்டனர். கேஷ் (ரொக்கப் பணம்) மட்டுமே பெறுவோம் என அறிவித்துள்ளனர்.