இனி ரயில்களில் சைவ உணவுகள் - பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு
ரயிலில் இஸ்கான் மற்றும் ஐஆர்சிடிசி இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் சைவ உணவு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சைவ உணவு
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, இஸ்கான் கோவிலின் கோவிந்தா உணவகத்துடன் இணைந்துள்ளது. தற்போது சாத்வீக உணவை சாப்பிட விரும்பும் பயணிகள் இஸ்கான் கோவிலின் கோவிந்தா என்ற உணவகத்தில் உணவை ஆர்டர் செய்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், இஸ்கான் மற்றும் ஐஆர்சிடிசி இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், இந்த வசதி டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு மண்டலங்களிலும் இந்த ரயில் வசதி தொடங்கப்படும்.
புது அறிவிப்பு
பயணிகள் நீண்ட பயணங்களின் போது உணவு உண்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதிலும் வெங்காயம், பூண்டு கூட சிலர் சாப்பிட விரும்புவதில்லை. த்ற்போது இந்த அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. மேலும் உணவு மெனுவில் டீலக்ஸ் தாலி, மகாராஜா தாலி, வெஜ் பிரியாணி, பனீர் உணவுகள், நூடுல்ஸ், தால் மக்கானி உள்ளிட்ட பல சாத்வீக உணவுகள் கிடைக்கும்.
இதற்கு, IRCTC இ-கேட்டரிங் இணையதளம் அல்லது Food on Track செயலியில் முன்பதிவு செய்யலாம். ரயில் புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் PNR எண்ணுடன் ஆர்டர் செய்ய வேண்டும். பின் உணவு இருக்கையை வந்தடையும்.