சாப்பாட்டில் கருக்கலைப்பு மாத்திரை; 7 கொலை.. இனி இதுதான் சரிப்படும் - சீமானை விளாசிய விஜயலெட்சுமி!
நடிகை விஜயலட்சுமி சீமானை கடுமையாக, கெட்ட வார்த்தைகளால் தாக்கி பேசியுள்ளார்.
ஆஜராகாத சீமான்
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து சம்மன் அனுப்பினர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகவில்லை.
சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜராகி புகார் தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட விஜயலெட்சுமி,
விஜயலெட்சுமி காட்டம்
"எனது பழைய வீடியோக்களை வெளியில் விட்டு, விஜயலட்சுமி பயந்து பொட்டி, படுக்கையைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார் என்று கூறுகிறார்கள். உங்க அண்ணன் பாஷையிலே சொல்லனும்னா, வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பே கிடையாது.
ஆகஸ்ட் 28ந் தேதி எந்த ஃபையரோட கமிஷனர் ஆபிஸ்ல காலடி எடுத்து வச்சேனோ, அதே நம்பிக்கையில இன்றைக்கு செப்டம்பர் 12ம் தேதியும் இருக்கேன். நான் என்னோட கடமையை பண்ணிட்டேன். காவல்துறை அவங்களோட கடமையைப் பண்ண காத்திருக்கிறேன்.
தவிர மக்கள் குழப்பற வேல வச்சுக்காதீங்க. குழப்பம் இருந்த பேஸ்புக்ல என்னோட ஐ.டி-ய பாலோ பண்ணுங்க. நான் உங்களுக்கு டெய்லியும் அப்டேட் பண்ணுறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விஜயலட்சுமிக்கு பாதுகாப்பு தர வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி, கோயம்பேடு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். விஜயலட்சுமிக்கு உணவில் மருந்து கலந்துகொடுத்து 7 முறை கருச்சிதைவு செய்து, கொலை செய்துள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.