நிறைய விஷயம் வெளியே வரும்; புரியும்னு நினைக்கிறேன் - விஜயலெட்சுமியை வார்ன் செய்த வீரலட்சுமி!
விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி வார்னிங் கொடுத்துள்ளார்.
பழி போட்ட விஜயலட்சுமி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்தார். அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் உடன் இருந்தார்.
விவகாரம் பூதாகரமான நிலையில், திடீரென சீமான் மீது கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக்கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார். இதற்கிடையே விஜயலட்சுமி விட்டாலும், நான் விட மாட்டேன் என சீமானை தொடர்ந்து வீரலட்சுமி சீண்டி வருகிறார்.
வீரலட்சுமி வார்னிங்
கொஞ்சம் விட்டிருந்தால் என்னை அங்கேயே கொலை செய்துவிட்டு அந்தப் பழியை அப்படியே சீமான் மீது போடலாம் என அவர்கள் பிளான் செய்திருந்தார்கள் என வீரலட்சுமி பற்றி பகீர் கருத்தைக் கூறியிருந்தார் விஜயலட்சுமி. இதனைத் தொடர்ந்து, வீரலட்சுமி என் கணவர் பூவை கணேசன் காலில் விழுந்து நீங்கள் கெஞ்சியதால் உங்களுக்கு உதவ சம்மதித்தோம்.
இப்போது நீங்கள் உங்களுக்கு நாங்கள் சாப்பாடு போடவில்லை என்று சொல்கிறீர்கள். நன்றியை மறந்துவிட்டு உங்களை கொலை செய்ய முயன்றதாக பழி போடுகிறீர்கள். உங்களுக்கு நான் லாஸ்ட் வார்னிங் தருகிறேன்.
இதற்கு மேல் எங்கள் மீது அபாண்ட பழி போட்டு வீடியோ வெளியிட்டால் நான் பல விஷயங்களை பற்றி வாயை திறக்க வேண்டியது வரும். நான் வாயை திறந்தால் உங்கள் பக்கம் யாரும் நிற்க மாட்டார்கள். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.