தன்னை குறித்து யூடியூபரின் மோசமான வீடியோ...சட்ட ரீதியாக அடக்கிய விஜய் தேவரகொண்டா..!!
நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தனிப்பட்ட வாழ்வை குறித்து கருத்து தெரிவித்தவர் மீது புகார் அளித்துள்ளார்.
விஜய் தேவரக்கொண்டா
அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றி இன்று நடிகர் விஜய் தேவரக்கொண்டாவை இந்தியா முழுவதும் கவனிக்கவைக்கும் ஒரு நாயகனாகவே வைத்துள்ளது. அதனை தொடர்ந்து பெரிய வெற்றி படத்தில் அவர் நடித்திடவில்லை என்றாலும், அவருடைய மார்க்கெட் இன்னும் சிறப்பாகவே உள்ளது.

பெரும்பாலும் நடிகைகளுடன் நெருக்கமாக நடித்து அது குறித்து அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாகவே கொண்டுள்ளார் விஜய் தேவரக்கொண்டா. நடிக்கும் அநேக படங்களில் நெருக்கமான காட்சிகள் இவரின் படத்தில் தாராளமாகவே இடம்பிடித்து விடுகிறது.
ஆபாச வீடியோ - ஆக்ஷன்
அதே நேரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் இவருக்கும் காதல் இருந்து வருவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. இதனை இருவரும் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. இருப்பினும் அது இருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் அதனை குறித்து பெரிதாக மற்றொரு பேசவேண்டிய அவசியம் இல்லை என்பதே பெரும்பானவர்களின் கருத்து.
இந்நிலையில் தான், ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் பகுதியை சேர்ந்த வெங்கட கிரண் என்பவர் தனது யூடியூப் சேனலில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அவருடன் நடித்த நாயகி ஒருவரைப் பற்றிய வதந்திகளைப் பகிர்ந்து பேசியுள்ளார். அந்த காணொளி வைரலான நிலையில், அது விஜய் தேவரகொண்டாவிற்கும் சென்று சேர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடித்து, ஆலோசனை மற்றும் வீடியோக்களை நீக்கி அவரை விடுவித்தனர்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை IBC Tamil