பெண் காவலரை தள்ளி விட்ட விசிக தொண்டர்கள் - மாநாட்டில் பரபரப்பு!

Thol. Thirumavalavan Tamil nadu Kallakurichi
By Swetha Oct 03, 2024 10:30 AM GMT
Report

பெண் காவலரை விசிக தொண்டர்கள் தள்ளி விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் காவலர்

தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

பெண் காவலரை தள்ளி விட்ட விசிக தொண்டர்கள் - மாநாட்டில் பரபரப்பு! | Vck Volunteers Pushed Female Police In Conferrence

இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். அதில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அதுமட்டுமின்றி மாநாட்டில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் மேடையில் குவிந்த விசிக தொண்டர்கள்..இடிந்து விழுந்த படிக்கட்டு

ஒரே நேரத்தில் மேடையில் குவிந்த விசிக தொண்டர்கள்..இடிந்து விழுந்த படிக்கட்டு

தொண்டர்கள் 

இதற்கிடையே, பெண் காவலரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் தள்ளிவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாநாடு தொடங்கியதும் ஒரு பகுதியில் அதிகளவில் கூடிய தொண்டர்கள் அங்கு அமைக்கபட்டு இருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து மாநாட்டு மேடையை நோக்கி செல்ல முயன்றனர்.

பெண் காவலரை தள்ளி விட்ட விசிக தொண்டர்கள் - மாநாட்டில் பரபரப்பு! | Vck Volunteers Pushed Female Police In Conferrence

இதனால் அங்கிருந்த போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண் காவலர்களுக்கு சிக்கி கொண்டுள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில்

சென்ற காரை வழிமறித்த பெண் காவலரை விசிகவின் பெண் மற்றும் ஆண் நிர்வாகிகளும் சேர்ந்து பணி செய்ய விடாமல் தடுத்து தள்ளி விட்ட சம்பவமும் நடந்துள்ளது.