அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த விசிக - அமைச்சர் உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்!புகைச்சலில் திமுக
விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அக்டோபர் 2-ந்தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். 2006-ல் இருந்து 2024 வரை 1589 பேர் பலியாகியுள்ளனர். 2016 தேர்தல் அறிக்கையில் திமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று உறுதியளித்தது.
திமுக-வுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. அதிமுக-வுக்கும் உடன்பாடு உண்டு . ஆனால் அதிமுக இதை அமல்படுத்தவில்லை. மேலும் இந்த மாநாட்டில் மதவாத - சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எங்களுக்குத் துணை நின்று இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம்.
உதயநிதி ஸ்டாலின்
மது போதயைவிட கொடியது மதவாத மற்றும் சாதிய போதை. அதன் காரணமாக மதவாத மற்றும் சாதிய சக்திகளுக்கு அழைப்பு இல்லை என்று கூறினார் . தொடர்ந்து பேசிய அவர்,''அதிமுக இந்த மாநாட்டிற்கு வர விரும்பினால் வரட்டும்.அவர்களும் எங்களுடன் சேரட்டும் என்று கூறினார்.
அதிமுகவுக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது குறித்து அமைச்சர் உதயநிதி எழப்பட்ட கேள்விக்கு விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் .
அந்த மாநாட்டில் பங்கேற்பது அவர்களுடைய விருப்பம் என்றும், இதுகுறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டுமென்றும் என்று தெரிவித்துள்ளார்.