விசிக சார்பில்..மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு - அதிமுகவுக்கு அழைப்பு!
விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
ஒழிப்பு மாநாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அக்டோபர் 2-ந்தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். 2006-ல் இருந்து 2024 வரை 1589 பேர் பலியாகியுள்ளனர். 2016 தேர்தல் அறிக்கையில் திமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று உறுதியளித்தது. திமுக-வுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு.
அதிமுக-வுக்கும் உடன்பாடு உண்டு. இடது சாரி கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உடன்பாடு உண்டு. எல்லா கட்சிகளுக்கும் மதுவிலக்கை வலியுறுத்தும் நிலையில், மதுக்கடைகளை மூடுவதில் தயக்கம் ஏன்? என்பதுதான் எல்லோருடைய கேள்வி.
நல்லச்சாராயத்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல. சாராயம் என்றாலே அது கேடுதான். நல்லச்சாராயம் என்று ஏதும் இல்லை. உள்ளத்திற்கும், உடலுக்கும் தீங்கானது. சமூகத்திற்கும், தேசத்திற்கும் கேடானது. ஆகவே முழுமையான மதுவிலக்குதான் தீர்வாக இருக்க முடியும்.
அதிமுகவும்..
அரசாங்கமே மதுவை விற்பனை செய்தால் கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்த முடியும் என்பதை கற்பனையான வாதம். எல்லா மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருக்கிறது. ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் அரசுகள் மதுபான கடைகளை திறந்திருக்கிறது.
பீகார், குஜராத் மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தினாலும் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருக்கதான் செய்கிறது. அதற்கு காரணம் அண்டை மாநிலங்களில் மதுபானங்கள் இருப்பதால். அதனால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சாராய விற்பனையில் அரசு ஒரு தாராளமான நிலைப்பாட்டை எடுக்கும்போது,
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், தயக்கம் ஏன்? என்பது யாரை குறித்து கேட்கிறீர்கள் என்ற கேள்விக்கு மதுவிலக்கை வலியுறுத்தும் எல்லோருக்கும்தான்.
அதிமுகவும் சொல்கிறது. ஆனால் அமல்படுத்தவில்லை. அவர்களும் எங்களுடன் சேரட்டும். இந்த மாநாட்டிற்கு வர விரும்பினால் வரட்டும். அதிமுக கூட வரலாம். எந்த கட்சிகளும் வரலாம் என்றார்.