10 நிமிடம் போதும்.. வாழைப்பூ பொரியலை இப்படி செஞ்சு பாருங்க..!

Healthy Food Recipes Women
By Vidhya Senthil Oct 13, 2024 05:38 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உணவு
Report

வாரம் ஒருமுறை உணவில் வாழைப்பூவை சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.குறிப்பாக நமது பித்தபையில் உள்ள கல்லை வராமல் தடுக்க உதவும். உங்களுக்காக வாழைப்பூ பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.  

poriyal

   தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
  • சின்ன வெங்காயம் - 15
  • வரமிளகாய் - 4 
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • வாழைப்பூ - 1 (பொடியாக நறுக்கியது) 
  • பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப 

தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பில் நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ,கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும் போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும் .

அதன் பிறகு வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கழித்து ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். 

10 நிமிடம் போதும்.. வாழைப்பூ பொரியலை இப்படி செஞ்சு பாருங்க..! | Vazhaipoo Poriyal Recipe In Tamil

 துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் 

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்து, அத்துடன் சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * வாழைப்பூ நன்கு வெந்ததும், அதில் அரைத்த தேங்காயை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைத்து இறக்கினால், சுவையான வாழைப்பூ பொரியல் ரெடி..