ஆஸ்துமா நோயை விரட்டியடிக்கும் தூதுவளை சூப் - செய்வது எப்படி?
lifestyle-health
By Nandhini
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து. தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து கூட சாப்பிடலாம்.
ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளை சூப்பை குடித்து வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கி குணப்படுத்தும்.
தூதுவளை சூப் செய்ய தேவையான பொருட்கள் -
- கொத்த மல்லித்தழை – சிறிது,
- சின்ன வெங்காயம் – 5,
- சீரகம் – 1/4 டீஸ்பூன்,
- முழு பூண்டு – 4 பல்,
- நெய் – 4 டீஸ்பூன்,
- உப்பு – தேவைக்கு,
- மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்.
செய்முறை -
- கடாயில் நெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, கொத்த மல்லித்தழை, தூதுவளை இலையை போட்டு நன்றாக வதக்கி இறக்க வேண்டும்.
- ஆறியதும் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்க வேண்டும்.
- மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
சூடான சூப்பில் மிளகுத்தூளை தூவி பரிமாற வேண்டும்.