இந்த திசையில் தப்பி தவறி கூட காலணிகளை கழட்டீராதிங்க - வறுமை, கஷ்டம் அதிகரிக்குமாம்!
வாஸ்து சாஸ்திரத்தின் படி காலணிகளை கழற்றி வைப்பதற்கான சரியான திசை பற்றிய தகவல்.
வாஸ்து சாஸ்திரம்
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்தவகையில் வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் என்றும் அன்னை லக்ஷ்மி கோபப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இது வீட்டின் பொருளாதார நிலையை பலவீனப்படுத்துகிறது. மேலும், இந்த திசையில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றுவது வீட்டில் வறுமையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையலாம்.
சரியான திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலணிகள் மற்றும் செருப்புகளின் அலமாரி வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையில் தான் எப்போதும் இருக்க வேண்டும். இந்த திசையில் தான் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றி வைக்க வேண்டும். அதேபோல் வீட்டின் பிரதான வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றக்கூடாது.
மேலும், வாஸ்து சாஸ்திரங்களின்படி ஒருபோதும் காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் தலைகீழாக வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் சீர்குலைக்கிறது. மேலும், இதனால் வீட்டில் வறுமை ஏற்படும்.