சாப்பிட்டவுடன் இந்த பழக்கம் இருக்கா? தப்பி தவறிக்கூட செஞ்சிடாதீங்க..கஷ்டம் அதிகரிக்குமாம்!
வாஸ்து சாஸ்திரம் படி சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சாப்பிட்டவுடன்..
மிகவும் பழமையான மொழிகளில் இந்து மதமும் ஒன்றாகும்.அந்த வகையில், இந்து சமய நூல்களிலும், வாஸ்து சாஸ்திரத்திலும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரை நாம் செய்ய வேண்டிய அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. சமய நூல்கள் இவ்வுலகத்திற்கு பலவிதமான போதனைகளை வழங்கியுள்ளன.
இந்துகள் தங்களது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய விதிகளை கூறியிருக்கிறது. அதன்படி, காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
ஆனால், சிலர் அதை பின்பற்றுவதில்லை. குறிப்பாக, உணவு தொடர்பான பல விதிகளை நாம் ஒவ்வொரு நாளும் அறியாமல் புறக்கணிக்கிறோம். இதனால் பலர் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என இந்து மத அறிஞர்கள் கூறுகின்றனர்.
அதாவது, நம்மில் பலர் சாப்பிட்ட பிறகு அதே தட்டிலேயே கை கழுவும் பழக்கம் இருந்திருக்கும். இந்த தவறை நாம் செய்தால் உணவு விதிகளை மீறுவது மற்றும் உண்ணும் உணவை அவமதிப்பது போன்றது ஆகும். எனவே சாப்பிட்டவுடன் இப்படி செய்யாமல் வேறு ஒரு இடத்தில் கைகளை கழுவிட வேண்டும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த பழக்கம்..
சாப்பிட்டு முடித்துவிட்டு கைகளை கழுவிய உடன் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பலர் இதைச் செய்யாமல் கைகளை உதறுவார்கள். இதனால், கைகளில் இருக்கும் தண்ணீர் பிறர் மீது விழும். இப்படி செய்தால் பாவம் உங்களைச் சூழ்ந்து கொள்ளும் என்றும் கூறுகிறார்கள்.
அன்னபூரணியின் அருளால் நமக்கு உணவு கிடைக்கிறது என்று இந்து மதம் கூறுகிறது.அப்படிபட்ட தெய்வத்தை சாப்பிடும் முன் ஒருமுறை நினைவு கொள்ளுங்கள். பிறகு சாப்பிட்ட தட்டை காய வைக்காமல் உடனடியாக கழுவ வேண்டும்.
சாப்பிட்ட பிறகு பலர் தங்களது பற்களுக்கு இடையே சிக்கியிருக்கும் துளைகளை அகற்ற ஊசி அல்லது டூத்பிக் பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு செய்வது வறுமைக்கு வழிவகுக்கிறது. வாயில் ஏதேனும் அசவுகரியம் இருந்தால் தண்ணீர் ஊற்றி, கொப்பளித்து துப்பினால் தூசுக்கள் வெளியேறும்.
மேலும் சிலர் சாப்பிடும்போது ஒரு பக்கம் சாய்ந்து சாப்பிடுவார்கள்.அப்படி செய்தல் வீட்டில் வறுமை அதிகாரிக்கும் என அறிஞர்கள் கூறுகின்றனர். அத்துடன், சாப்பிட்ட உடன் தூங்குவது உடல் நலத்திற்கும் நல்லதல்ல என்கிறது அறிவியல். ஆகையால் இந்த தவறுகளை செய்துவிட வேண்டாம்.