வீட்டில் அடிக்கடி சண்டை வருதா? இதை பண்ணுங்க போதும்- எல்லாம் மாறும்!

Relationship
By Vidhya Senthil Nov 25, 2024 01:30 PM GMT
Report

 வீட்டில் கற்றாழை செடியை எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 கற்றாழை செடி

கற்றாழை செடி மருத்துவ குணம் நிறைந்தது. இந்த செடியை அனைவரது வீட்டிலும் எளிமையாக வளர்க்கப்படும் செடி. இது உடல் ஆரோக்கியம் மற்றும் சருமம் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாகவே கற்றாழை செடி வைத்தால் பாம்பு வீட்டிற்குள் வராது என்று கூறுவார்கள்.

வீட்டில் கற்றாழை செடியை எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும்

அதனால் தான் அனைவரின் வீடுகளிலும் துளசிச் செடியைப் போலக் கற்றாழை செடி வளர்க்கப்படுகிறது. ஆனால் கற்றாழை செடியை வாஸ்து படி வைத்தால் நிறையப் பலன் என்பது யாருக்கும் தெரியாது. வாஸ்துப்படி, கற்றாழை செடி வீட்டினுள் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

உங்க வீட்டில் இந்த பூ இருக்கா? வாழ்வில் தடைகள் உடைத்தெறியும் ரகசியங்கள்...!

உங்க வீட்டில் இந்த பூ இருக்கா? வாழ்வில் தடைகள் உடைத்தெறியும் ரகசியங்கள்...!

 நன்மைகள் 

அதுமட்டுமில்லாமல் கற்றாழையை வீட்டில் வைப்பதன் மூலம் அன்பு, முன்னேற்றம், செல்வம், பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை. வாழ்வில் அல்லது வெற்றியில் வரும் அனைத்து விதமான தடைகளையும் நீக்க இந்த செடி உதவுகிறது.

வீட்டில் கற்றாழை செடியை எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும்

அதோடு, வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் நீங்கும். அந்த வகையில் வீட்டின் தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.மறுபுறம், வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடுவது மனதிற்கு அமைதியைத் தரும் எனச் சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.