இனி யாராலும் அசைக்க முடியாது - பட்டா போட்ட வருண் சக்கரவர்த்தி!
ஸ்பின்னருக்கான இடத்தை வருண் சக்கரவர்த்தி பிடித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
வருண் சக்கரவர்த்தி
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக இந்திய அணியின் ஆதிக்கம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதன்மை ஸ்பின்னர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் இருந்தனர். இதில் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்
அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் முதன்மை ஸ்பின்னர்களாக இருந்தாலும், வருண் சக்கரவர்த்தி அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே வங்கதேச டி20 தொடரில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்து முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தற்போது பவர் பிளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என்று அனைத்து சூழல்களிலும் பவுலிங் செய்யக் கூடியவராக இருப்பதால், இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.