அந்த விஷயத்தில் இந்திய வீரர்கள் அருகில் கூட போக முடியாது - மோர்கன் ஆதங்கம்
இந்திய அணியின் சாதனைகள் குறித்து இயன் மோர்கன் பேசியுள்ளார்.
இந்திய அணி
இந்திய மண்ணில் உலகக்கோப்பையை வெல்வதை விடவும், டெஸ்ட் தொடரை வெல்வதுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஐசிசி தொடர்களில் இந்திய அணி குறைந்தபட்சம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி வந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான போட்டிகளிலும் பிசிசிஐ ஆதிக்கம் செலுத்தி வருவதாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்துப் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் பேசுகையில், சொந்த மண்ணில் இந்திய அணியை மிகச்சிறந்த அணி என்று தாராளமாக சொல்லிவிடலாம்.
வெற்றிக்கான பசியுடன் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். கடைசி வரை போராட வேண்டும் என்ற குணமும் அவர்களின் மனதில் பதிந்துவிட்டது. எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்து கொள்வதில்லை.
மோர்கன் பேச்சு
இங்கிலாந்து அணிக்கும் சொந்த மண்ணில் ஏராளமான சாதகமான விஷயங்கள் உள்ளது. ஆனால் நமது சாதனைகளை, இந்திய அணியின் சாதனையையும் ஒப்பிடவே முடியாது. ரன்கள், வெற்றிகள் என்று அனைத்திலும் இந்திய அணி வேறு உச்சத்தில் உள்ளது.
தற்போது இந்திய அணிக்கு முன் இருக்கும் முக்கியமான சவால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான். தற்போது விளையாடுவது போல் ஆஸ்திரேலியா மண்ணிலும் விளையாடினால், மிகப்பெரிய வெற்றியை பெற முடியும்.
அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் நேதன் லயனை எப்படி இந்திய பேட்ஸ்மேன்கள் கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் வெற்றி அமையும். ஒருவேளை நேதன் லயனை இந்திய அணியினர் அட்டாக் செய்தால், ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இடையிலேயே ஏராளமான கேள்விகள் எழும் என்று தெரிவித்துள்ளார்.