கோலி கிடையாது; இவர்தான் ஆல் பார்மேட் பெஸ்ட் பேட்ஸ்மேன் - டிகே பளீச்
ஆல் பார்மேட் பெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரராக விராட் கோலி கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறார்.
டி20 உலகக்கோப்பை தொடருடன் அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
பெஸ்ட் பேட்ஸ்மேன்
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கிடம் ஒரு பிரத்யேக நிகழ்ச்சியில் 3 ஃபார்மேட்டிலும் சிறப்பாக விளையாடும் வீரர்? குறித்த கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
தற்போது அனைவருக்கும் முன்னால் டிராவிஸ் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஜெய்ஸ்வால் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார் ஆனால் இன்னும் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
எனவே அவர் இந்த இடத்தை பிடிக்க இன்னும் சில கால அனுபவம் தேவை. தற்போதைய நிலவரப்படி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் டிராவிஸ் ஹெட் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்று நான் கூறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.