இவர்கள் 3 பேரையும் நிச்சயம் சிஎஸ்கே தக்க வைக்கும் - அஜய் ஜடேஜா உறுதி

MS Dhoni Ravindra Jadeja Ruturaj Gaikwad Chennai Super Kings
By Sumathi Oct 03, 2024 08:32 AM GMT
Report

 3 பேரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கும் என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு 10 ஐபிஎல் அணிகளும் வீரர்களை தக்க வைக்கும் விதிமுறைகள் வெளியானது.

இவர்கள் 3 பேரையும் நிச்சயம் சிஎஸ்கே தக்க வைக்கும் - அஜய் ஜடேஜா உறுதி | Dhoni Ruturaj Jadeja In Csk Retention Plan Ipl

அதில், சீசனுக்கு முந்தைய 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமால் உள்ள இந்திய Capped வீரர், Uncapped வீரராக கருதப்படுவார். அவர் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்று இருக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவங்க 2 பேர்தான் எனக்கு 2வது பிறப்பை கொடுத்தாங்க - ரோஹித் சர்மா

அவங்க 2 பேர்தான் எனக்கு 2வது பிறப்பை கொடுத்தாங்க - ரோஹித் சர்மா

அஜய் ஜடேஜா நம்பிக்கை

இந்நிலையில். இதுகுறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, “எதிர்வரும் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவது உறுதி.

ajay jadeja

அதில் துளியும் சந்தேகம் இல்லை. இப்போது அவர் Uncapped வீரராக உள்ளார். அணிக்காக அவர் நிறைய செய்துள்ளார். மேலும், அணியின் நம்பர் 1 வீரர் தான் என்ற விருப்பமும் அவருக்கு இல்லை. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அதேபோல ரவீந்திர ஜடேஜாவையும் தவிர்க்க முடியாது. ஆக, இந்த மூவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் தக்க வைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.