பிட்ச் எப்படி இருந்தாலும் அசத்துவாரு; அவர்தான் சிறந்த இந்திய வீரர் - ஆர்பி சிங் பாராட்டு

Jasprit Bumrah Indian Cricket Team
By Sumathi Oct 02, 2024 09:30 AM GMT
Report

பும்ராவை 21ஆம் நூற்றாண்டின் சிறந்த இந்திய வீரர் என ஆர்பி சிங் பாராட்டியுள்ளார்.

பும்ரா

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

rp singh

கான்பூரில் 2 நாட்கள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் 2வது போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவிலிங்கில் பும்ரா 67 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு பெரிதாக உதவினார்.

வங்கதேசத்தை துவம்சம் செய்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ”பும்ராவுக்கு தன்னுடைய மதிப்பு தெரியும்.

RCB-க்கு எதிரான தோல்வி; டிவியை உடைத்த தோனி? வைரலாகும் வீடியோ!

RCB-க்கு எதிரான தோல்வி; டிவியை உடைத்த தோனி? வைரலாகும் வீடியோ!

ஆர்பி சிங் பாராட்டு

போட்டியில் எந்தளவுக்கு நம்மால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது அவருக்குத் தெரியும். அவரைப் போன்ற பவுலர் இல்லாமல் இந்திய சூழ்நிலைகளில் எந்த கேப்டனும் இதுப் போன்ற போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்.

bumrah

அடுத்த 15 – 20 வருடங்கள் கழித்து அவருடைய தாக்கமும் புள்ளிவிபரங்களும் பெரிதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் பும்ரா இந்த நூற்றாண்டின் சிறந்த மித வேகப்பந்து வீச்சாளர் என்று நான் கருதுகிறேன். எந்த வகையான ஃபார்மெட்டிலும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் அவரிடம் பந்தை கொடுங்கள்.

அவர் கேப்டனுக்கு தேவையான விக்கெட்டை எடுத்துக் கொடுப்பார். எனவே அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்” என பாராட்டு தெரிவித்துள்ளார்.