1066 நாட்கள்; தவித்த தமிழக வீரர், இப்படி நடக்கவே கூடாது - உதவிய கம்பீர்!
1066 நாட்களுக்கு பின் தமிழக வீரர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
Ind vs Ban
2021ல் இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆறு போட்டிகளில் ஆடியிருந்தார் வருண் சக்கரவர்த்தி. பின் அவருக்கு ஏற்பட்ட சிறிய காயத்தால் சுமார் 3 ஆண்டுகளாக இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
1066 நாட்களுக்குப் பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தனது சிறந்த சர்வதேச டி20 பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.
தமிழக வீரர் அசத்தல்
4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் ஓவரில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர், அடுத்த மூன்று ஓவர்களில் வெறும் 16 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார்.
அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான். வருண் சக்கரவர்த்திக்கு 33 வயது ஆகும் நிலையில் இன்னும் சில ஆண்டுகளே அவர் இந்திய அணியில் இடம் பெற முடியும்.
2026 டி20 உலகக்கோப்பையில் அவரை ஆட வைக்க கவுதம் கம்பீர் திட்டமிட்டு இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.