பவுலிங் தப்பா இருக்கு; பாண்டியாவை குறிவைத்த மோர்கல் - இந்திய அணி ட்விஸ்ட்
பாண்டியாவின் பந்துவீச்சு குறித்து மோர்கல் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவரது பந்துவீச்சிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. வலைப் பயிற்சியின் போது மோர்னே மோர்கல் - ஹர்திக் பாண்டியா இடையே சில நிமிடங்களுக்கு தீவிரமான பேச்சுவார்த்தை இருந்ததாக கூறப்படுகிறது.
மோர்கல் அதிருப்தி
பாண்டியா ஓடி வந்து பந்து வீசும் போது எதிர்முனை ஸ்டம்புக்கு மிக அருகே செல்வதை கவனித்துள்ளார். பின் அவரிடம் அது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்ததுடன், அவரது ஓட்டத்தை மாற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக உள்ளனர். இவர்களுடன் நிதிஷ் குமார் ரெட்டியும் அணியில் இருக்கிறார்.
அதன்படி, ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணியில் போட்டி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.