அவங்க 2 பேர்தான் எனக்கு 2வது பிறப்பை கொடுத்தாங்க - ரோஹித் சர்மா
விராட் கோலி, ரவி சாஸ்திரி குறித்து ரோஹித் சர்மா உருக்கம் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா
2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரோஹித் சர்மா 2012 வரை மிடில் ஆர்டரில் விளையாடி கொண்டிருந்தார். தொடர்ந்து, தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் துவக்க வீரராக களமிறக்கினார்.
2018 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய நிலையில், 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்த உலக சாதனை படைத்ததார். இந்நிலையில் ரோஹித் சர்மா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், “என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலே விளையாட வைத்தது எளிதான முடிவல்ல.
2வது பிறப்பு
அவர்கள் என்னை நம்பினார்கள். அவர்கள் என்னை ஒரு பயிற்சி போட்டியில் விளையாடுமாறு சொன்னார்கள். அதில் நான் முதல் பந்திலேயே டக் அவுட்டானேன். ஆனால் அடுத்த வாய்ப்பை பிடிப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்று நான் உணர்ந்தேன். அது டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு இரண்டாவது பிறப்பை போன்ற உணர்வைக் கொடுத்தது.
ஓப்பனிங் அல்லது 5, 6 உட்பட எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் அதைப் பிடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதே சமயம் வாய்ப்பை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காமல் என்னுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாடுவேன் என்பதை அவர்களுக்கு நான் காட்டினேன்.
டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் முதல் பந்தில் அடிக்க விரும்பினேன். அதற்கான சுதந்திரத்தை அவர்கள் எனக்குக் கொடுத்தனர். 2015லயே ரவி பாய் என்னை ஓப்பனராக களமிறக்க விரும்பினார். இருப்பினும் அந்த முடிவு என் கையில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.