RCB-க்கு எதிரான தோல்வி; டிவியை உடைத்த தோனி? வைரலாகும் வீடியோ!
தோனி டிவியை உடைத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தோனி
கடந்த 2024 ஐபிஎல் தொடரின் போது பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில், ஆர்சிபி அணிக்கு எதிராக
27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆர்சிபி அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
வைரல் வீடியோ
போட்டி முடிந்தபிறகு ஆர்சிபி வீரர்களிடம் தோனி கைகுலுக்காமல் சென்றது அப்போது பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், தற்போது சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
MS Dhoni broke the TV in anger after losing to RCB ????? pic.twitter.com/oR9PJcmski
— ’ (@LuckyyGautam18) September 29, 2024
அதில், ஸ்போர்ட்ஸ் யாரிடம் பேசும் அந்த பத்திரிக்கையாளர், “எனக்கு ஒரு பிரத்யேக ஸ்கூப் பற்றித் தெரிய வந்தது. நான் பஜ்ஜி (ஹர்பஜன்) பாஜியிடம் தோனி ஏன் ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்கவில்லை என்று கேட்டேன்.
அதற்கு அவர் கை மட்டும் குலுக்காமல் செல்லவில்லை, கோபத்தில் ஒரு டிவியையும் உடைத்தார் என்று கூறினார். அவர் கையிலிருந்த போட்டியை தவறவிட்டதற்காக மிகவும் கோபமாக இருந்தார்” எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.