இந்திய அணிக்குள் வரும் வருண் சக்கரவர்த்தி - யாருக்கு பதிலாக தெரியுமா?
இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருண் சக்கரவர்த்தி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள முதல் போட்டி நாக்பூரில் நடைபெறவுள்ளது. அங்கு சென்றுள்ள வருண் சக்கரவர்த்தி ஒருநாள் அணி வீரர்களுடன் பயிற்சி செய்து வருகிறார்.
அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியது. இதற்கிடையில், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் வாய்ப்பு?
தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியிலும் இடம் பெற வாய்ப்புள்ளது. ங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் வருண் சக்கரவர்த்தியை ஆட வைத்து பரிசோதனை செய்து,
அவரை சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதுவரை 10 டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.