அணியில் சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டார்கள் - பகீர் கிளப்பும் கோலி
தன்னை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டார்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை
இந்தியாவில் உள்ள மாநில மற்றும் பிராந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணி சார்பாக, விராட் கோலி ரஞ்சி கோப்பையில் ஆடி வரும் நிலையில், அந்த போட்டியை காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.
டெல்லி மற்றும் ரயில்வே அணிக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி 6 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் டெல்லி அணி சிறப்பாக ஆடி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
விராட் கோலி
இந்நிலையில் விராட் கோலி, சக வீரரான தினேஷ் கார்த்திக்குடன் தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நடத்திய உரையாடல் வைரலாகி வருகிறது. இதில் பேசிய அவர், "நான் U14 டெல்லி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது, சில சிக்கல்கள் காரணமாக நள்ளிரவு 1 மணிக்கு என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். மாநில அளவில் நடக்கும் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
சில காரணத்தால்(லட்சம்) என்னை அணியிலிருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை தேர்வு செய்து விட்டார்கள். ரூ.1லட்சம் வழங்கினால் 2 போட்டிகள் கழித்து அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என என் தந்தையிடம் கூறினார்கள். 'அவனை விளையாட வைக்க ஒரு பைசா கூட தர மாட்டேன். அவன் திறமையில் விளையாடினாள் விளையாடட்டும். இல்லையென்றால் வேண்டாம் என என் தந்தை கூறினார்' என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்ததோடு, தனது தந்தையின் செயல் எனது தொழில் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியாதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.