நகை கடையாக வலம் வந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் சிக்கினார் - கூட்டாளியை சுட்டுக்கொன்று ஆற்றில் வீச்சு..!

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Thahir Jun 22, 2023 05:08 AM GMT
Report

நீலாங்கரையை கூட்டாளியை கொலை செய்து சடலத்தை காரில் துாக்கிச் சென்று தாமிரபரணி ஆற்றில் வீசியதாக ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

புகாரை கிடப்பில் போட்ட போலீசார் 

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென காணவில்லை எனக் கூறி அவரது மனைவி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணையை கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவரது மனைவி செந்தில் மாயமான வழக்கை விசாரிக்க உத்தரவிடுமாறு தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்பியதாக தெரிகிறது.

மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார் 

தென் மண்டல ஐஜி அஸ்ராக் கார்க் உத்தரவின் பேரில், விருதுநகர் எஸ்.பி சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், அருப்புக்கோட்டை ஏஎஸ்பி வருண் கார்க் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து மாயமான செந்திலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மாயமான செந்தில் சம்வத்தன்று கடைசியாக ரவுடி வரிச்சியூர் செல்வத்துடன் பேசி இருப்பதை வைத்து, வரிச்சியூர் செல்வத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து அனுப்பி வைத்தனர்.

Varichiyur Selvam who killed his accomplice

2 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் அவரது நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார் புதன்கிழமை வரிச்சியூர் செல்வம் வீட்டிற்கு சென்றனர்.

வரிச்சியூர் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் 

இந்த நிலையில் போலீசாருக்கு பயந்து தப்பி ஓட முயன்ற வரிச்சியூர் செல்வத்தை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

விருதுநகர் சிறப்பு தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனது கூட்டாளியாக இருந்த செந்திலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை சென்னை நீலாங்கரை பகுதிக்கு அழைத்து வந்து பிற கூட்டாளிகளுடன் சேர்ந்து சுட்டுக் கொலை செய்து தாமிரபரணி ஆற்றில் வீசியதாக வரிச்சியூர் செல்வம் வாக்குவமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.