Tuesday, Apr 29, 2025

என்கிட்டயே ரூம் போடவான்னு கேட்டான் - அட்ஜெஸ்மெண்ட் குறித்து வரலெட்சுமி பகீர்

Varalaxmi Sarathkumar Tamil Cinema
By Sumathi 2 years ago
Report

அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி கசப்பான அனுபவங்களை வரலெட்சுமி பகிர்ந்துள்ளார்.

வரலெட்சுமி 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான "போடா போடி" படத்தின் மூலன் திரை உலகில் தோன்றியவர்தான் வரலட்சுமி சரத்குமார். தாரை தப்பட்டை, மாரி 2, விக்ரம் வேதா, சண்டக்கோழி, சர்க்கார் போன்ற படங்களில் இவரது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

என்கிட்டயே ரூம் போடவான்னு கேட்டான் - அட்ஜெஸ்மெண்ட் குறித்து வரலெட்சுமி பகீர் | Varalakshmi Sarathkumar Opens Up Adjustment Issue

அதனைத்தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளிகளில் நடித்து கலக்கி வருகிறார் வரலட்சுமி. தற்போது இவரது கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி், கலர்ஸ், யஷோதா என அதிகமான படங்கள் உள்ளன.

 அட்ஜெஸ்மெண்ட்

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கொன்றால் பாவம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், பெரிய குடும்பத்து பின்னணியைக் கொண்ட தன்னிடமே ரியாலிட்டி ஷோவுக்காக பேச வந்த ஒரு நபர் மற்ற விஷயங்களுக்காக ஹோட்டலில் ரூம் போடவான்னு கேட்டான்.

என்கிட்டயே ரூம் போடவான்னு கேட்டான் - அட்ஜெஸ்மெண்ட் குறித்து வரலெட்சுமி பகீர் | Varalakshmi Sarathkumar Opens Up Adjustment Issue

எனக்கு செம கோபம் வந்தது. என் ஃபிரெண்ட் கிட்ட சொன்னபோது, அவனை அறையாம சும்மாவா விட்ட? என்று கேட்டாள். இளம் நடிகைகளிடம் என்ன எல்லாம் கேட்பான்னு யோசித்து ஷாக் ஆகி தான் அவனை உடனடியா துரத்தி விட்டேன் என பேட்டியில் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.