கல்யாணம் நடந்தா யார் லைப் தான் நல்ல இருக்கும்? வரலக்ஷ்மி திடீர் வீடியோ - அதிர்ந்த ரசிகர்கள்
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
வரலக்ஷ்மி
சரத்குமாரின் மகளாக அறிமுகமான நடிகை வரலக்ஷ்மி தற்போது தென்னிந்திய திரைஉலகில் தனக்கென தனி பெயரையும், இடத்தையும் சேர்த்துள்ளார். தொடர்ந்து நாயகியாக மட்டும் நடித்திடாமல், துணை கதாபாத்திரங்கள், குறிப்பாக நெகட்டிவ் ஷ்டே கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து பெரும் பிரபலத்தை வரலக்ஷ்மி பெற்றுள்ளார்.
அண்மையில் தெலுங்கு படமாக வெளியான வரலட்சுமியின் "ஹனுமான்" படம் இந்திய அளவில் பெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது 38 வயதாகும் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
மும்பையை சேர்ந்த 41 வயதான நிகோலய் என்பவரை கரம் பிடிக்கவுள்ள வரலக்ஷ்மி மற்றும் நிகோலய் குறித்து தான் தொடர்ந்து பல செய்திகள் வெளிவருகின்றன.
யார் நல்ல இருப்பாங்க
இருவர் மீதும் எதிர்மறையான விமர்சனங்கள் இருக்கும் நிலையிலும் அதனை அழகாக கடந்து செல்கிறார் வரலக்ஷ்மி. தன்னை பாசிட்டிவாக வைத்து, விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், தான் வரலக்ஷ்மி வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதில், திருமணமானால் யார் சந்தோசமாக இருப்பார்கள் என்றும் , புகைப்பட கலைஞர்கள் முதல் திருமண நிகழ்வில் வேலை செய்பவர்களே என விளையாட்டாக பேசியுள்ளார் வரலக்ஷ்மி.