நான் இரண்டாம் தாரமா..? நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த வரலக்ஷ்மி
நடிகை வரலட்சுமிக்கு அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.
வரலக்ஷ்மி
சரத்குமாரின் மகளாக அறிமுகமான நடிகை வரலக்ஷ்மி தற்போது தென்னிந்திய திரைஉலகில் தனக்கென தனி பெயரையும், இடத்தையும் சேர்த்துள்ளார். தொடர்ந்து நாயகியாக மட்டும் நடித்திடாமல், துணை கதாபாத்திரங்கள், குறிப்பாக நெகட்டிவ் ஷ்டே கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து பெரும் பிரபலத்தை வரலக்ஷ்மி பெற்றுள்ளார்.
அண்மையில் தெலுங்கு படமாக வெளியான வரலட்சுமியின் "ஹனுமான்" படம் இந்திய அளவில் பெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது 38 வயதாகும் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
மும்பையை சேர்ந்த 41 வயதான நிகோலய் என்பவரை கரம் பிடிக்கவுள்ள வரலக்ஷ்மி மற்றும் நிகோலய் குறித்து தான் தொடர்ந்து பல செய்திகள் வெளிவருகின்றன.
உங்கள் வாழ்க்கையை...
பலரும் இவரை இரண்டாம் தாரம் என விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மறைமுகமாக வரலக்ஷ்மி பதிவிட்டுள்ளது வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக வரலக்ஷ்மி வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில்,
உலகத்திற்கு ஏற்ற வகையில் பெண்களை மாற்றுவது குறித்து சிந்திக்காதீர்கள். உலகத்தை பெண்களுக்கு ஏற்றார் போல மாற்றுவது பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு நாளும் பெண்களாகிய நாம் நிறைய தடைகளை எதிர்கொள்கிறோம்.
உங்களுக்கான விதிமுறைகளில் வாழும் அனைத்து பெண்களுக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் உங்களை குறித்து சொல்லும் கருத்துக்களுக்கு கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.
அவர்கள் உங்களுக்காக இருக்கப்போவதில்லை. நீங்கள்தான் உங்களுக்காக இருக்கப்போகிறீர்கள். ஆகையால் வாழ ஆரம்பியுங்கள். பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்ளுங்கள்.” என்று வரலக்ஷ்மி பதிவிட்டுள்ளார்.