ஆண் போன்றவர் வரலக்ஷ்மி - நேர்லயே பார்த்திருக்கிறேன் - போட்டுடைத்த பிரபலம்
நடிகை வரலட்சுமிக்கு அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.
வரலக்ஷ்மி
சரத்குமாரின் மகளாக அறிமுகமான நடிகை வரலக்ஷ்மி தற்போது தென்னிந்திய திரைஉலகில் தனக்கென தனி பெயரையும், இடத்தையும் சேர்த்துள்ளார்.
தொடர்ந்து நாயகியாக மட்டும் நடித்திடாமல், துணை கதாபாத்திரங்கள், குறிப்பாக நெகட்டிவ் ஷ்டே கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து பெரும் பிரபலத்தை வரலக்ஷ்மி பெற்றுள்ளார். அண்மையில் தெலுங்கு படமாக வெளியான வரலட்சுமியின் "ஹனுமான்" படம் இந்திய அளவில் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.
ஆண் போன்று...
தற்போது 38 வயதாகும் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த 41 வயதான நிகோலய் என்பவரை கரம் பிடிக்கவுள்ள வரலக்ஷ்மி மற்றும் நிகோலய் குறித்து தான் தொடர்ந்து பல செய்திகள் வெளிவருகின்றன.
பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் இவர்கள் குறித்து பேசும் போது, வரலட்சுமியை நாம் ஆண் என்று அழைக்கலாம் என்று குறிப்பிட்டு, இரவு 12 மணிக்கு வீட்டிற்கு வரும் வரலட்சுமி அப்போது யாராவது சீண்டினால், அவர்களை நொறுக்கி விடுவார் என்றும் அவர் நடுரோட்டில் நின்று சண்டையிடுவதை தானே பார்த்திருப்பதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.
You May Like This Video