கழுத்திலேயே மிதித்த நடிகர் -எலும்பு உடைஞ்சிடுச்சு - யாரை சொல்கிறார் வரலக்ஷ்மி..?
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தாரை தப்பட்டை படத்தில் நடைபெற்ற விபத்து குறித்து பேட்டியளித்துள்ளது வைரலாகி வருகின்றது.
வரலக்ஷ்மி
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி(39). இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி சர்க்கார், சண்டைக்கோழி 2, தெலுங்கில் "கிராக்" போன்ற படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார் வரலக்ஷ்மி.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் அவருக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
எலும்பு முறிவு
விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சினிமா ஷூட்டிங்கின் போது தனக்கு சகநடிகரால் எலும்பு உடைந்த சம்பவம் குறித்து வரலக்ஷ்மி அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது.
பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படம் வரலக்ஷ்மியின் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படங்களில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்த படத்தில் தான் அவருக்கு விபத்து நடந்துள்ளது.
ஒரு காட்சியில் படத்தின் வில்லன் நடிகர் வரலக்ஷ்மியை கழுத்தில் மிதித்த போது வரலட்சுமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், ஷாட் சரியாக வந்தபிறகு இயக்குனர் பாலா நேராக வந்து தனது கழுத்தில் இருந்த செயினை வரலக்ஷ்மி போட்டு பாராட்டியுள்ளார்.