திருமணத்திற்கு முன்பே பல கோடிக்கு Gift - வரலட்சுமியை இன்பத்தில் ஆழ்த்திய வருங்கால கணவர்

Sarathkumar S Varalakshmi Marriage
By Karthick May 01, 2024 04:01 PM GMT
Report

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அவரின் காதலர் Nicholai Sachdev என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

வரலக்ஷ்மி

சரத்குமாரின் மகளாக அறிமுகமான நடிகை வரலக்ஷ்மி தற்போது தென்னிந்திய திரைஉலகில் தனக்கென தனி பெயரையும், இடத்தையும் சேர்த்துள்ளார். தொடர்ந்து நாயகியாக மட்டும் நடித்திடாமல், துணை கதாபாத்திரங்கள், குறிப்பாக நெகட்டிவ் shade கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து பெரும் பிரபலத்தை வரலக்ஷ்மி பெற்றுள்ளார்.

varalakshmi husband gifts her a costly gift

அண்மையில் தெலுங்கு படமாக வெளியான வரலட்சுமியின் "ஹனுமான்" படம் இந்திய அளவில் பெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது 38 வயதாகும் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

varalakshmi husband gifts her a costly gift

மும்பையை சேர்ந்த 41 வயதான நிகோலய் என்பவரை கரம் பிடிக்கவுள்ள வரலக்ஷ்மி மற்றும் நிகோலய் குறித்து தான் தொடர்ந்து பல செய்திகள் வெளிவருகின்றன.

நான் இரண்டாம் தாரமா..? நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த வரலக்ஷ்மி

நான் இரண்டாம் தாரமா..? நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த வரலக்ஷ்மி

இவர்கள் இது தொடர்பாக பல கருத்துக்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து பாசிட்டிவாக உள்ளார் வரலக்ஷ்மி.

varalakshmi husband gifts her a costly gift

இந்த நிலையில், இவர்களுக்கு எப்போது திருமணம் என்பது தெரியவில்லை. இருப்பினும் திருமணத்திற்கு முன்பே பல கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார் வரலட்சுமியின் வருங்கால கணவர்.  இது உறுதிப்படுத்தப்படாத தகவலே என்றாலும், இந்த செய்தி வேகமாக பரவி வருகின்றது