அப்பா மாதிரி நேர்மையாக இருப்பேன் - படுகொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ மகன் - நீதிபதியாகினார்
மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ்சின் மகன் ஏசுவடியான் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
விஏஓ லூர்து பிரான்சிஸ்
தூத்துக்குடி மாவட்டத்தின் முறப்பநாடு, கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். 55 வயதான இவர், மணல் கொள்ளையை தடுத்த விவகாரத்தில் கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளான தூத்துக்குடி கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (41), மாரிமுத்து (31) இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதியானார்
விஏஓ லூர்து பிரான்சிஸ்'ஸின் மகன் மார்ஷல் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் ஏசுவடியான் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இது குறித்து அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில், அப்பாவை போல தானும் நேர்மையாக நடந்து கொள்வேன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.