காசு கொடுத்தால்தான் காரியம் நடக்கும் - விவசாயிடம் லஞ்சம் கேட்டு சிக்கிய பெண் விஏஓ!
விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்ற பெண் விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச குற்றச்சாட்டு
திண்டுக்கல், அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துபேயத்தேவர். இவரது சொந்தமான இடம் கே.போத்தம்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தை தன்னுடைய மகன் காசிமாயன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய நீண்ட நாள்களாக விஏஓ அலுவலகத்திற்கு அலைந்த வண்ணம் இருந்துள்ளார்.
தொடர்ந்து, பெயர் மாற்றம் செய்ய விஏஓ ரம்யா, ரூ.9000 லஞ்சமாக தர வேண்டுமென்றும், பணம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். உடனே, இதுகுறித்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகாரளித்துள்ளார்.
விஏஓ கைது
அதனையடுத்து ரசாயணம் தடவிய ரூ.9,000 ரொக்கத்தை பெற்ற முத்துப்பேயத்தேவர், அதை ரம்யாவிடம் கொடுக்க, அவர் வாங்கும்போது டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து இவர்மீது ஏகப்பட்ட புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வந்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.