நீதிமன்றத்தில் முடியைப் பிடித்து சண்டை போட்ட 2 பெண் வழக்கறிஞர்கள் -வைரலாகும் வீடியோ
நீதிமன்றத்தில் முடியைப் பிடித்து ஒருவரையொருவர் சண்டை போட்ட 2 பெண் வழக்கறிஞர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முடியை பிடித்து சண்டை போட்ட 2 பெண் வழக்கறிஞர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்திரபிரதேச மாநிலம், கஸ்கஞ்ச் மாவட்ட நீதிமன்றத்தில் 2 பெண் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். மற்ற வழக்கறிஞர்கள் ஓடி வந்து விலக்கியும், இந்த இரு பெண்களும் முடியை பிடித்து ஒருவரையொரு அடித்துக் கொண்டு சண்டைப்போட்டனர்.
இது குறித்து நீதிமன்றத்தில் காவலில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடி வந்த போலீசார் இரு வழக்கறிஞர்கள் பெண்களை விலக்கிவிட்டனர். ஒரு பெண் வழக்கறிஞர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#UttarPradesh : In Kasganj district court, 2 women advocates fought fiercely,
— Siraj Noorani (@sirajnoorani) October 28, 2022
Video went viral on #SocialMedia, police registered a case on the complaint of female advocate@mmanishmishra ?️ #ViralVideos #Viral #india pic.twitter.com/iDI8wZZVlW