எனக்கு அந்த நோய் ரொம்ப வருஷமா இருக்கு - ஷாக்கிங் தகவல் சொன்ன வனிதா
நடிகை வனிதா விஜய்குமார் தனக்குள்ள நோய் ஒன்றினை குறித்த தகவலை கூறிய நிலையில், அந்த செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.
வனிதா விஜயகுமார்
90-களில் சில படங்களில் நாயகியாக நடித்த வனிதா விஜயகுமார், சில ஆண்டுகள் முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமடைந்தார். அந்நிகழ்ச்சி அவருக்கு மீண்டும் கொடுத்த அறிமுக தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார்.
அடாவடித்தனத்தால் குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் வனிதா, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நடுவராகவும், படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து தற்போது நடித்து வருகின்றார்.
அந்த நோய் இருக்கு
அவ்வப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டியளித்து வரும் வனிதா விஜயகுமார், தற்போது தனக்குள் பாதிப்பு ஒன்றினை தெரிவித்துள்ளது வைரலாகி வருகின்றது.
அந்த அண்மை பேட்டியில், கிளாஸ்ட்ரோஃபோபியா(Claustrophobia) என்கிற நோய் பாதிப்பு தனக்கு பல வருடங்களாகவே இருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையால், சிறிய இடங்களிலோ அல்லது பாத்ரூம், லிப்ட் போன்ற இடங்களில் தன்னால் அதிக நேரம் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.