பெண்கள் தம் அடிக்குறது முன்னேற்றம் தான் நான் பாக்குறேன் - தடாலடியாக கூறிய வனிதா
சினிமாவில் பெண்கள் புகைப்பிடப்பதை குறித்து கேட்கப்பட்ட கேள்வியில் நடிகை வனிதா விஜயகுமார் அதிரடியாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார்
90-களில் சில படங்களில் நாயகியாக நடித்த வனிதா விஜயகுமார், சில ஆண்டுகள் முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமடைந்தார். அந்நிகழ்ச்சி அவருக்கு மீண்டும் கொடுத்த அறிமுக தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார்.
சமீபத்தில் வனிதா புகைபிடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பேசும் பொருளாக மாறின. இந்த நிலையில் இது தொடர்பாக வனிதா பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்.
தம் அடிப்பதும் முன்னேற்றம் தான்
அப்போது பேசிய அவர், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி குடிப்பழக்கத்தை பற்றி பேசி இருந்தது அனைவரும் அறிந்ததே.எல்லோருமே குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என்று சொல்வார்கள். சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என குறிப்பிட்டார்.
அதனால் சினிமாவையும் நிஜ வாழ்க்கையும் ஒன்றாக இணைக்காதீர்கள். நடிகர்கள் படங்களில் புகை பிடிப்பதை வரவேற்கிறீர்கள். ஆனால், அதே நடிகைகள் செய்தால் சர்ச்சையாக்குகிறீர்கள் என கூறிய வனிதா, இந்த விஷயத்தை தான் ஒரு முன்னேற்றமாக பார்பதாகவே தெரிவித்தார்.
காலம் மாறுகிறது. இதையும் வரவேற்க வேண்டும். இதனால் அவர்கள் நிஜத்திலும் அதை செய்வார்கள் என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். தான் புகைபிடிக்கும் படி நடித்தது படத்தின் தேவை என்று கூறி, அதற்காக தான் இப்படி தான் என்று தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தை மற்றவர்கள் சர்ச்சையாக தேவையில்லை என்று அந்த பேட்டியில் வனிதா தெரிவித்துளளார்.