இவர்தான் உலகத்திலேயே தலை சிறந்த கணவர்.. நினைத்து நினைத்து கதறிய வனிதா - யார் அது?

Vijaykumar Tamil Cinema Viral Video Vanitha Vijaykumar
By Vidhya Senthil Nov 22, 2024 01:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

  உலகத்திலேயே தலை சிறந்த கணவர் யார் குறித்து  என்பது  வனிதா பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதா 

சந்திரலேகை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாகத் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனால் அந்த திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை . தொடர்ந்து வனிதா நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவினர்.

vanitha vijayakumar

அதன்பிறகு 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட வனிதா சினிமாவில் இருந்து விலகினார். இதனிடையே 2007-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்த வனிதா, அதே ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் எனபரை திருமணம் செய்துகொண்டார்.

விவாகரத்துக்கு பிறகு இருவரும் எடுத்த முடிவு - மீண்டும் இணையும் ஜிவி & சைந்தவி!

விவாகரத்துக்கு பிறகு இருவரும் எடுத்த முடிவு - மீண்டும் இணையும் ஜிவி & சைந்தவி!

தொடர்ந்து 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்த வனிதா அதன்பிறகு தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இதனிடையே 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை வனிதா 3-வது முறையாகத் திருமணம் செய்துகொண்டு மீண்டும் விவாகரத்து பெற்றார்.

தலை சிறந்த கணவர்

தற்பொழுது பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரிஎண்டரி கொடுத்த வனிதா திரைப்படங்கள், சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகள் என செம பிசியாக இருந்து வருகின்றார். இந்த உலகத்திலேயே தலை சிறந்த தந்தை குறித்து வனிதா பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

vanitha vijayakumar praises her father vijaykumar

அதில் என்னைப் பொறுத்தவரை நான் பார்த்ததில் உலகிலேயே சிறந்த கணவர் என் தந்தை விஜயகுமார் தான். அவருக்கு இரண்டு மனைவிகள். இருப்பினும் இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, அவர்கள் இருவருக்கும் சரி சமமான அன்பையும் உரிமையையும் கொடுத்து வந்தார்.

அந்த விதத்தில் என் தந்தை விஜயகுமார் அவரின் இரண்டு மனைவிகளுக்கும் சிறந்த கணவராகச் செயல்பட்டுள்ளார். எனவே தான் உலகிலேயே சிறந்த கணவர் என் தந்தை விஜயகுமார் என தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.