Sunday, Jul 6, 2025

விவாகரத்துக்கு காரணமே இதுதான் - சாய்ராவின் வழக்கறிஞர் விளக்கம்!

Tamil Cinema A R Rahman Divorce
By Sumathi 8 months ago
Report

விவாகரத்து பற்றி ஏ ஆர் ரகுமான் மனைவியின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் மனைவி சாய்ரா ஏ ஆர் ரகுமானை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து ரஹ்மானும் அந்த செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார்.

lawyer vandana shah

இந்நிலையில், சாய்ரா அவருடைய கணவர் ஏ.ஆர் ரஹ்மானை பிரிவதை பற்றி வழக்கறிஞர் வந்தனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மகளின் காதலை ஜீரணிக்க முடியல; இதனால்தான் மன்னித்தேன் - ரகசியம் உடைத்த பாக்யாஜ்

மகளின் காதலை ஜீரணிக்க முடியல; இதனால்தான் மன்னித்தேன் - ரகசியம் உடைத்த பாக்யாஜ்

என்ன காரணம்?

தொடர்ந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் விவாகரத்து குறித்து பகிர்ந்துள்ள அவர், பிரபலங்களின் திருமண வாழ்க்கையில்.. அதிலும் பாலிவுட் விவாகரத்துக்கு காரணம் கள்ள தொடர்பு கிடையாது. போர் அடிப்பது தான் காரணமாக இருக்கும். பிரபலங்கள் ஒருவரை திருமணம் செய்து போரடித்தவுடன் அவரை பிரிந்து மற்றொருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ar rahman - saira banu

one night stand எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. போரடிப்பதால் தான் உறவுகள் முறிந்து போகிறது. பிரபலங்களின் வாழ்க்கை வித்தியாசமானது. சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல பெரும் பணக்கார குடும்பங்களிலும் இது நடக்கிறது.

கணவர் அல்லது மனைவியின் அப்பா, சகோதரர், மாமனார் ஆகியோரால் பிரபலங்களின் வாழ்க்கையில் சவால் நிறைந்ததாக இருக்கிறது. இதனை பொதுவாக கூறினேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.