எனக்கு கண்ணீரே வருகிறது.. மகன் குறித்து திடீர் பதிவு போட்ட வனிதா!
மகன் விஜய் ஸ்ரீ ஹரி குறித்து வனிதா உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வனிதா விஜயகுமார்
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. இதற்கிடையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த வனிதா பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தார்.
உருக்கமான பதிவு
அதன்பின், குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சமூக வலைதளங்களில், மகன் குறித்த பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை என்னுடைய மூத்த மகன் நடிகனாக மாறி இருக்கிறார்.
அவருக்கு வாழ்த்துக்கள் என்று விஜய் ஸ்ரீஹரியை டேக் செய்து இருக்கிறார். அதோடு என்னுடைய மகனுக்காக கதை கேட்டு ஆசிர்வாதம் செய்த ரஜினி அங்கிளுக்கு ரொம்பவும் நன்றி. என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது.
அவன் இன்னும் மேலும் அதிகமாக வளர வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பலரும் வனிதா மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.