தொகுப்பாளரை விட நான் பெரிய லூசு.. லவ் இருக்கு.. அவரும் ஓடிட்டாருன்னா - வனிதா ஒபன் டாக்!
வனிதா பிக் பாஸ் பற்றியும் தனது காதல் பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
வனிதா
பிக் பாஸ் சீசன் 8ல் முதல் போட்டியாளராக கலந்துக் கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிய ரவீந்தருடன் வனிதா விஜயகுமார் நேரடி உரையாடல் நடந்துள்ளது. அதாவது யூடியூப் சேனல் ஒன்றில்,
ரவீந்தர் மற்றும் வனிதா விஜயகுமார் நேரடியாக பிக் பாஸ் சீசன் 8 பற்றி பேசிய பேட்டி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தொகுப்பாளினியை விட நான் ரொம்ப பெரிய லூசு என்றும் என்னை விட பெரிய லூசு ரவீந்தர் என்றும் வனிதா விஜயகுமார் சிரித்துக் கொண்டே பேசியுள்ளார்.
லவ் இருக்கு..
வனிதா விஜயகுமார் அடுத்த படம் எப்போ என்றும், வனிதா விஜயகுமார் அடுத்த ரிலீஸ் எப்போ என்றும் ரவீந்தர் போட்டு வாங்க காதல் இருக்கு என உளறி கொட்டி விட்டார் வனிதா விஜயகுமார்.
உடனடியாக வனிதா கன்னம் எல்லாம் சிவக்குது யாரு அந்த நபர் என கேட்க, அதெல்லாம் சொல்ல முடியாது என்றும் ஆனால், ஆள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.