GOAT பட நடிகரை காதலிச்சேன்; அந்த விஷயம் நடந்ததும் தூக்கமே இல்ல - போட்டுடைத்த வனிதா!
நடிகர் பிரபுதேவா குறித்து நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.
வனிதா விஜயகுமார்
விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், குக் வித் கோமாளி நிகச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இதையடுத்து தற்போது சில படங்களை நடித்து வருகிறார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், நடிகர் பிரபு தேவா குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது "பிரபுதேவா என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை தான் நான் காதலித்தேன். இந்த விவகாரம் என்னுடைய அப்பாவிற்கு தெரிந்து விட்டு, ஐயையோ இந்த பெண் பைத்தியம் விட்டு ஆகிவிட்டார் என்றெல்லாம் நினைத்தார்.
தூக்கமே வரவில்லை
மேலும், கூலி படத்தில் நடித்த என்னுடைய அக்கா கவிதாவிடம் கேமரா இருந்தது. ஒருமுறை பிரபுதேவாவிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டதற்கு சரி என்று சொன்ன உடனே என்னுடைய அக்காவை எடுக்க சொன்னேன்.

அவரும் எடுத்தார். நான் ரொம்ப சந்தோசமாக இருந்தேன். இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அதனால் புகைப்படத்தை பார்க்க ரொம்ப ஆர்வம். பின் காலையில் புகைப்படத்தை பார்த்து நான் ரொம்பவே அதிர்ச்சியாகி விட்டேன்.
அதில் நான் மட்டும் தான் இருக்கிறேன். பிரபு தேவா தலையே இல்லை" என்று வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். நடிகர் பிரபு தேவா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தி கோட்" படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil