வாழ்க்கை முடிந்துவிட்டது; காதல் தோல்வியால் தற்கொலை - வனிதா விஜயகுமார் உருக்கம்!

Tamil Cinema Vanitha Vijaykumar Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 08, 2024 03:55 PM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமார் மேடையில் உருக்கமாக பேசியுள்ளார். 

வனிதா விஜயகுமார்

இயக்குநர் சுகன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் பிதா. இந்த படத்தில் , அனு, ஆதேஷ் பாலா முதன்மை கதாபாத்திரத்திலும், அருள்மணி, சாம்ஸ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

[5UY59B

பிதா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார் "அனைவரது வாழ்க்கையிலும் ஒரு தேடல் இருக்கும். அது தனிப்பட்ட வாழ்க்கை, ப்ரெபஷனல்னு 2 விதமாக வாழ்க்கை சென்று கொண்டு இருக்கும். அதில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். குறிப்பாக பெண்கள் அதிகமாக கொடுப்போம். ஆரம்பித்த இடத்திலே கடைசியில் வந்து நிற்போம்.

குஷ்பூ-வை பார்த்த ரஜினி; என்கிட்ட வாய்விட்டு கேட்ட விஷயம் - போட்டுடைத்த வைரமுத்து!

குஷ்பூ-வை பார்த்த ரஜினி; என்கிட்ட வாய்விட்டு கேட்ட விஷயம் - போட்டுடைத்த வைரமுத்து!

வெற்றி இருக்கிறது

என்னுடைய வாழ்க்கையும் அப்படித்தான். இன்று நான் சந்தோஷமா இருக்கக் காரணம், நான் நடித்த 2 படங்கள் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் பிதா படத்தோடு நான் இணைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

வாழ்க்கை முடிந்துவிட்டது; காதல் தோல்வியால் தற்கொலை - வனிதா விஜயகுமார் உருக்கம்! | Vanitha Vijayakumar Emotional Speech

வாழ்க்கை முடிந்துவிட்டது அவ்வளவுதான் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் உள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, காதலில் தோல்வி அடைந்தால் தற்கொலை ஆகியவற்றைத் தாண்டி வெற்றி இருக்கிறது.

நம்பிக்கையோடு விடாமல் முயற்சி செய்து கொண்டே இருங்கள். சினிமா என்பது சாதாரணமானது கிடையாது. பொறுமை வேண்டும் என்பது போகப்போக தான் தெரியும்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.