ஜோதிகா செஞ்சா ரசிக்கலாம்; என் பொண்ணு செஞ்சா தப்பா - வனிதா ஆதங்கம்
ஜோதிகாவை எடுத்துக்காட்டாக சொல்லி வனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆடை விவகாரம்
நடிகை வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்காக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவருடைய மகள் ஜோவிகா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள வனிதா, என்னுடைய மகள் ஜோவிகா மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது பாவாடை தாவணி போட்டு இருந்தாங்க.
வனிதா ஆதங்கம்
அப்போது கூட சிலர் நீங்க ட்ரெடிஷனல் உடை எல்லாம் போட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்கள். அதோடு அந்த உடையில் என்னுடைய மகள் இடுப்பு தெரிகிறது என்று சிலர் கலாய்த்து இருக்கிறார்கள். குஷி படத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஜோதிகா இடுப்பை காட்டி பெரிய அளவில் பிரபலம் ஆனாங்க.
அந்த படத்தில் ஜோதிகாவின் இடுப்புதான் பேமஸ் ஆனது. ஆனா இப்போது ஜோவிகா இடுப்பை காட்டினா அதை பெருசா பேசுறீங்க. நான் இதை பத்தி எல்லாம் கண்டுக்க போறது கிடையாது.
என்னுடைய பொண்ணு அழகா இருக்கிறா. அதனால அவளுக்கு எந்த உடை சௌகர்யமா இருக்குதோ அதை அவள் உடுத்திட போறா.. அவ்வளவுதான். இதை பெரிய விஷயமாக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.