ஸ்ரீதேவி கதவ பூட்டிட்டு அத பண்ணுவா.. வீட்ல எதும் சொல்ல மாட்டாங்க - போட்டுடைத்த வனிதா!
தனது தங்கை ஸ்ரீதேவி குறித்து நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.
திருமணம்
நடிகர் விஜயகுமார் முத்துக்கன்னு என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். அதில் அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என 3 பிள்ளைகள் உள்ளனர்.
இரண்டாவதாக நடிகை மஞ்சுளாவை அவர் திருமணம் செய்துகொண்டார். அதில் விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்களும் உள்ளனர். இதில் குடும்ப பிரச்சனை காரணமாக வனிதா விஜயகுமார் தனித்து வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் விஜயகுமாரின் மகள் அனிதாவின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்ட நிலையில், வனிதா மட்டும் அழைக்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டம் செய்வாள்
இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது தங்கையும், நடிகையுமான ஸ்ரீதேவி குறித்து பேசியுள்ளார். அதில், "நான் தான் எங்க அம்மாவிடம் அதிகமாக அடி வாங்குவேன். சின்ன வயதிலிருந்தே எந்த தவறு செய்தாலும் ஸ்ரீ பாப்பா மட்டும் தப்பித்துவிடுவாள்.
எதாவது செய்துவிட்டு வீட்டிற்குள் போய் கதவைப் பூட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வாள். சின்னத்தம்பி படத்தில் வரும் குஷ்பு போல், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் தூக்கிப்போட்டு உடைத்துவிடுவாள்.
இதனால் பயந்துபோன எல்லோருமே, இவளை ஏதாவது சொன்னால் ஏதாவது செய்துகொள்வாளே என்ற பயத்தில், எதுவும் சொல்லமாட்டார்கள். அந்த மாதிரி நடித்து எல்லோரையும் பயம் காட்டி வைத்திருக்கிறாள்" என்று தெரிவித்துள்ளார்.
You May Like This Video