தனலட்சுமி சீன் ஓவரா இருக்கு - ஜனனிக்கு சப்போர்ட் பண்ண வனிதா!
தனலட்சுமி இவ்வளவு சீன் போடுவது கொஞ்சம் ஓவரா தான் இருக்கிறது என வனிதா தெரிவித்துள்ளார்.
ஜி. பி. முத்து
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 சென்ற வாரம் தொடங்கியது. இந்த சீசன் தொடங்கிய முதல் வாரத்திலேயே அழுகை, சண்டை, வாய் தகராறு, கூச்சல் என மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் வீட்டினுள் நுழைந்து உள்ளார்கள். அதில் டிக் டாக் மூலம் பிரபலமானவர் தனலட்சுமி. இவருக்கும் ஜி. பி. முத்து இடையேயும் பெரும் தகராறு ஏற்பட்டு வருகிறது. நாமினேஷன் செய்யும் போது மாறி மாறி நாமினேட் செய்து கொள்கிறார்கள்.
தனலட்சுமி ஆவேசம்
நேற்று முன்தினம் தனலட்சுமி ஜி,பி. முத்துவை பார்த்து நடிக்காதீங்க என கூறியது பெரும் சண்டையை ஏற்படுத்தியது. இதனால் ஜி. பி. முத்து "நான் நடிக்கிறேனா..."என கூறி அழுக ஆரம்பித்துவிட்டார். அனைவரும் சேர்ந்து ஜி.பி.முத்துவை சமாதானம் செய்து வைத்தனர்.
இவர்கள் இருவரின் சண்டை குறித்து ஜனனி பேசுகையில் இது இந்த வீட்டில் வயதில் பெரியவர்களும் உள்ளனர். போட்டியாளர்களை ஒரே வயசுல போடறதுக்கு இது ரீல்ஸ் கிடையாது என பேசியது தனலட்சுமிக்கு கடுப்பை கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்தியது.
வனிதா ஆதரவு
இதனால் வீட்டில் உள்ள மற்றவர்களும் ரீல்ஸ் பற்றி தவறுதலாக எப்படி நீங்கள் பேசலாம் என கேட்க மிரண்டு போனார் ஜனனி. தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகை வனிதா, ஜி.பி. முத்து மிகவும் திறமையானவர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அது தான் அவரை பிக் பாஸ் போட்டியாளராக கொண்டு வந்துள்ளது.
அவர் மிகவும் தெளிவாக தான் இருக்கிறார். எனக்கு ஒன்னும் தெரியாது என தாமரை போல நடிக்கவில்லை. ஜனனி மிகவும் சரியாக தான் பேசியிருந்தார். இது ரீல்ஸ் செய்யும் இடம் அல்ல இது பிக் பாஸ் வீடு என்று கூறியதில் எந்த தவறும் இல்லை. இதற்கு தனலட்சுமி இவ்வளவு சீன் போடுவது கொஞ்சம் ஓவரா தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.