தேவயானி மீது கோபத்தில் வனிதா விஜயகுமார் - என்ன காரணம்?

Devayani Vanitha Vijaykumar
By Petchi Avudaiappan May 13, 2022 12:16 PM GMT
Report

நடிகை தேவயானி நடிக்கும் புது புது அர்த்தங்கள் சீரியலில் வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

சின்னத்திரையில் விரல் விட்டு எண்ணக்கூடிய சீரியல்கள் ஒளிபரப்பான காலம் போய் தினந்தோறும் புதிதாக ஏதேனும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது.  குறிப்பாக விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் மக்களின் ஃபேவரெட் லிஸ்டில் அதிகம் இடம் பெற்றுள்ளது.  

 அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் புது புது அர்த்தங்கள் சீரியல் ஒளிபரப்பான குறுகிய நாட்களிலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.   சீரியலின் கதை அம்சமும் லட்சுமி அம்மாவாக நடிக்கும் நடிகை தேவயானியின் நடிப்பு தான் அதற்கு காரணமாக உள்ளது.

சொல்லப்போனால் தேவயானியின் நடிப்பால் இந்த சீரியல் தற்போது டாப் ரேட்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுக்கிறார்.  கதைப்படி  தேவயானி வேலை செய்யும் பிங்க் எஃப்.எம்.மில் நேர்காணல் ஒன்றுக்காக வனிதா வருகிறார். அவரிடம் கேட்கப்படும் கேள்விகளை எழுதி கொடுப்பவராக தேவயானி உள்ளார். அதில் எல்லா கேள்விகளும் பர்சனல் கேள்விகளாக இருக்க கல்யாணம், விவாகரத்து பற்றியும் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதனால் வனிதாவுக்கு கோபம் வந்து விடுகிறது.

இதனால் சேனல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.