நீ அந்த சாதியா?.. பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த சர்ச்சை, அந்த மாதிரி வேலை தான் பாக்குறா - வனிதா ரோஸ்ட்!
பிக் பாஸ் வீட்டிற்கு சாதி பற்றி பெரியது குறித்து வனிதா பேசியுள்ளார்.
சாதி சர்ச்சை
பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போட்டியாளர் மாயா சாப்பிடும் போது சிக்கன் எடுக்க வில்லை. உடனே மணி நீ என்ன பிராமிணா இதை சாப்பிடமாட்டாயா என்று கேட்டுள்ளார். உடனே மாயா இதையெல்லாம் நீ ஏன் சொல்கிறாய். இதுவெல்லாம் மிகவும் தவறான விஷயம் என்று சொல்லி எழுந்திருந்து சென்றார்.
இது பெரிய சர்ச்சையானது. இதுகுறித்து வனிதா விஜயகுமார், "மாயா இந்த விஷயத்தில் சூழ்ச்சி செய்கிறாள். இதெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களை ஏமாற்றும் விஷயம். இந்த விஷயத்தில் மாயா மிகவும் ஸ்மார்ட்" என்று கூறினார்.
வனிதா
இதனை தொடர்ந்து, "இந்த விஷயத்தில் மாயா எடுத்து வந்தது என்பது அவள் வேண்டுமென்றே இதை எடுத்து வருகிறாள் என்றுதான சொல்ல முடியும். அதை ஏன் நாம் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை. என்னையும் கூட சில பேர் நீங்கள் பிராமிணா, தேவரா என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள். அதை நாம் அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.
மாயா இந்த விஷயத்தை வேண்டுமென்றே பெரிது படுத்துகிறாள் என்று தான் எனக்குத் தோன்றியது. அவள் ஏன் பின்னால் சென்று பேச வேண்டும். அந்த மாயா, முகத்திற்கு நேராக யாரையுமே கேள்வி கேட்க மாட்டுகிறாள்.
அதுக்கு பின்னாடி பேச மட்டும் தான் தெரிகிறது. அவள் பிராமிணோ, இல்லையோ ஆனால், மூன்று வாரமாக அவள் மாமி வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்" என்று கூறியுள்ளார்.