என் புள்ளைய பார்த்து எப்படி அந்த மாதிரி சொல்லுவ? - வறுத்தெடுத்த வனிதா!
பிக் பாஸ் வீட்டில் தனது மகளை குறிப்பிட்டு பேசியது பற்றி வனிதா விளாசியுள்ளார்.
டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து டாஸ்க்குகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஒரு டாஸ்க்கில் முதல் இடத்துக்கு ஆசைப்பட்டு நிற்கும் பிரதீப் ஆண்டனி தான் ஏழ்மையானவன் என்றும் ஜோவிகா பயன்படுத்தும் செருப்பு முதல் மேக்கப் வரை அனைத்துமே காஸ்ட்லி என்றும் அதற்கு எதுக்கு முதல் இடம் என சண்டை போட்ட ப்ரோமோ வெளியாகியது.
அதில் ஜோவிகா பணக்காரி என்றும் தான் ஏழை என்றும் பிக் பாஸ் வீட்டில் கிடைக்கும் பணம் தனக்கு ரொம்ப முக்கியம் என்பதால் முதலிடத்தில் நிற்கிறேன் என பிரதீப் ஆண்டனி சண்டை போட்டுள்ளார். இதனை பார்த்த வந்த விஜயகுமார் தனது மகளுக்கு எதிராக பேசியதால் பிரதீப் ஆண்டனியை விளாசியுள்ளார்.
வனிதா
இந்நிலையில், நடிகை வனிதா, கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு அம்மாவின் மகள் தான் ஜோவிகா என்றும் உன்னிடம் காசு இல்லைன்னு புலம்புவதற்காக ஏன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த என்று கேட்டு பொங்கி வருகிறார்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் வரும் பணத்தை வைத்து இவர் படம் தயாரித்து நடிப்பார் என்பதெல்லாம் சுத்த உருட்டு, அவருக்கு திறமை இருந்தால் நல்லா நடிச்சா மத்தவங்கள் பணம் போட்டு உன் படத்தை தயாரிக்கப் போறாங்க என்று கூறி அவரை சாடியுள்ளார்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
