இதோ ஸ்டார்ட் ஆயிடுச்சுல்ல Entertainment.. ஜனனி, ஆயிஷாவிடம் காதலை சொன்ன போட்டியாளர்கள்!
பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாட்டாக செய்த லவ் புரோபோஸ் வீடியோ வைரலாகியுள்ளது.
பிக் பாஸ்
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 சென்ற வாரம் தொடங்கியது. இந்த சீசன் தொடங்கிய முதல் வாரத்திலேயே அழுகை, சண்டை, வாய் தகராறு, கூச்சல் என மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் வீட்டினுள் நுழைந்து உள்ளார்கள். தொடர்ந்து, டாஸ்க் மற்றும் அன்றாட வேலைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஜாலியாக பேசிக்கொண்டும்,பாடல் பாடியும், கதைகளை பேசியும் நேரத்தை கழிக்கின்றனர்.
லவ் புரோபோஸ்
அந்த வகையில் ஜனனி, மகேஸ்வரி, ஆயிஷா, ராம், மணிகண்டன், அசால் கோலார் ஆகியோர் கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது டைம்பாஸூக்காக ஒரு போலி ஆடிஷன் நடத்தினர்.
இதில் லவ் புரோபஸல் செய்வது போல சீன் சொல்லப்பட்டது. முதலில் வந்த மணிகண்டன் ஜனனியிடம் காதல் சொன்னார். அடுத்து அசல் கோளாரு ஜனனியிடம் ராப் பாடல்கள் பாடி என்னை விரும்புகிறாயா இல்லையா? நேரடியாகச் சொல்லுங்கள்.
உங்கள் பதில் இல்லை என்றால், நான் இனி உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என தெரிவித்தார். தொடர்ந்து ராம் ஆயிஷாவிடம் காதல் சொல்வது போல ஆடிஷன் இடம் பெற்றது.
இதனை பார்த்த பார்வையாளர்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.