10 வருடங்கள் ஆகியும் உங்களை மறக்கமுடியவில்லை - கண் கலங்கிய வனிதா!

Tamil Media Vanitha Vijaykumar
By Vinothini Jul 05, 2023 08:46 AM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றில் வேதனையை பகிர்ந்துள்ளார்.

வனிதா

தமிழ் சினிமாவில் பிரபலங்களான மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மூத்த மகள், வனிதா. இவர் 1990-ம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்தார்.

vanitha-shares-about-her-mother

பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இரண்டு திருமணம் செய்தார் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை. தற்பொழுது தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

வேதனை

இந்நிலையில், இவர் தற்பொழுது தனது தாய் குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இவர், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா, 10 வருடங்கள் ஆகியும் இன்னும் உங்களை பற்றி நினைப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை.

vanitha-shares-about-her-mother

நீ எனக்கு கற்றுக் கொடுத்த அனைத்தையும் உன்னை போலவே நான் செய்து வருகிறேன். எனது ஸ்கிரீன் சேவர், வால்பேப்பர், மற்றும் எனது வீட்டில் உன்னை பற்றிய நினைவுகள் உள்ளது. என்னை சுற்றிலும் நீங்கள் இருக்கிறீர்கள். நான் உன்னை ஒரு நாள் சந்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.